ஹைதராபாத்தில் குண்டு வைத்தவர்கள் 'ஸ்லீப்பர் செல்' நபர்களா? தகவல்கள் உள்ளன!!
நாட்டை உலுக்கியுள்ள ஹைதராபாத் குண்டுவெடிப்புகளுக்கு எந்த தீவிரவாத இயக்கமும் இதுவரை உரிமை கோரவில்லை. ஏதோ ஒரு இந்திய முஜாஹிதீன் இயக்கமே காரணமாக இருக்கலாம் என்ற அளவிலேயே தற்போது ஊகங்கள் உள்ளன.
ஹர்ஹத் உல் ஜிகாதி இஸ்லாமி என்ற ஹூஜி தீவிரவாத அமைப்புதான் காரணமாக இருக்கலாம் என்பது தற்போதுள்ள ஊகங்களில் ஒன்று.
ஆனால், அதை உறுதியுடன் அடித்துச் சொல்ல முடியாது.
காரணம், கடந்த ஆண்டு டில்லி போலீஸின் தீவிரவாத தடுப்பு பிரிவினர் கடந்த ஆண்டு கைது செய்த நபர் ஒருவரை அப்போது விசாரித்தபோது, அவர், ஹைதராபாத் தில்சுக் நகர் பகுதியில் ஸ்லீப்பர் செல்கள் இருப்பது பற்றிய தகவல்களை கொடுத்திருந்தார்.
தற்போது குண்டுவெடிப்பு நடந்துள்ளதும், அந்த ஏரியாவில்தான்.
கடந்த ஆண்டு குறிப்பிட்ட இந்த நபர் பற்றிய உளவுத் தகவல்கள் கிடைத்ததை அடுத்து, டில்லி போலீஸின் தீவிரவாத தடுப்பு பிரிவினர், ஹைதராபாத் சென்றே அவரை கைது செய்தனர்.
இந்த நபரிடம் இருந்து கிடைத்த தகவல்களின் முக்கியத்துவம் கருதி, கைது செய்யப்பட்டவரின் முழு அடையாளங்களையும் டில்லி போலீஸ் அப்போது வெளியிடவில்லை.
தாம் கைது செய்துள்ள நபரின் பெயர், 'சையத் மக்பூல்' என்று மட்டுமே தெரிவித்தது டில்லி போலீஸ்.
விசாரணையின்போது இந்த மக்பூல், ஹைதராபாத் தில்சுக் நகர் பகுதியில் இயங்கியதை சொல்லியிருக்கிறார்...அடுத்த பக்கம் வாருங்கள்
No comments:
Post a Comment