ஆப்கான் உளவுத்துறை அலுவலகம் மீது இன்று காலை தலிபான் தற்கொலை தாக்குதல்!
இன்று காலை ஆப்கான் தலைநகர் காபுல் அருகே உள்ள உளவுத்துறை அலுவலகத்துக்கு முன் தற்கொலை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. தற்கொலை தாக்குதல் நடத்த காரில் வந்த நபர் உளவுத்துறை அலுவலகத்துக்கு உள்ளே நுழைய முடியாமல், வெளி கேட் அருகே மடக்கப்பட்டதில், கார் வெடித்துச் சிதறி இரு பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.
காபுல்லில் இருந்து 159 கி.மீ. தொலைவில் உள்ள ஜலாலாபாத்தில் உள்ள தேசிய உளவுத்துறை அலுவலகமே தீவிரவாத அமைப்பினரால் இலக்கு வைக்கப்பட்டது.
இன்று சூரிய உதயத்தின்பின் இந்த அலுவலகத்தை நோக்கி வேகமாக கார் ஒன்று வந்தது. வெளி கேட்டையும், மரத் தடுப்பையும் கடந்து உள்ளே போய் அலுவலகத்தில் மோதுவதே திட்டம்.
ஆனால், கார் வேகமாக வருவதைக் கண்ட பாதுகாப்பு அதிகாரிகள் இரும்பு கேட்டை மூடிவிட்டதில், கார் கேட்டில் மோதி வெடித்தது.
கேட்டை மூடிய இரு பாதுகாப்பு அதிகாரிகளும் உயிரிழந்தனர். மூவர் காயமடைந்தனர்.
ஆப்கான் தலிபான் சார்பில் அவர்களது செய்தி தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித், இந்த தாக்குதலுக்கு தலைிபான்கள் உரிமை கோருவதாக தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment