Twitter

Follow palashbiswaskl on Twitter

Memories of Another day

Memories of Another day
While my Parents Pulin babu and Basanti devi were living

Saturday, April 6, 2013

“300 என்ஜினீயரிங் கல்லூரிகளின் அனுமதியை ஏன் ரத்து செய்ய கூடாது?” -அண்ணா நோட்டீஸ் Chennai high court: Engineers jobless; Why create more Engineering seats?

"300 என்ஜினீயரிங் கல்லூரிகளின் அனுமதியை ஏன் ரத்து செய்ய கூடாது?" -அண்ணா நோட்டீஸ்

Chennai high court: Engineers jobless; Why create more Engineering seats?


சென்னை ஹைகோர்ட், தமிழகத்தில் உள்ள என்ஜினியரிங் கல்லூரிகள் தொடர்பாக காரசாரமான உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது அண்ணா பல்கலைக்கழகம். "300 என்ஜினீயரிங் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது?" என விளக்கம் கேட்டு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஆசிரியர் பற்றாக்குறை, போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருக்கும் என்ஜினீயரிங் கல்லூரிகள் இவை என அடையாளம் காணப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள் தவிர 520 தனியார் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அனைத்து கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் வருடந்தோறும் அங்கீகாரம் பெற வேண்டும்.

கல்லூரிகளில் ஆசிரியர்கள், ஆய்வுக்கூடம், எந்திரங்கள் உள்ளிட்ட உள் கட்டமைப்பு வசதிகளை இதற்கான அமைக்கப்பட்டுள்ள குழு ஆய்வு செய்து அறிக்கை கொடுக்கும். அதன் அடிப்படையில் அங்கீகாரம் வழங்கப்படும்.

இந்த நிலையில் 5 இடங்களில் செயல்பட்ட அண்ணா பல்கலைக்கழகங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டதை தொடர்ந்து நூற்றுக்கும் மேற்பட்ட குழுக்கள் தமிழ் நாட்டில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும் ஆய்வு மேற்கொண்டன. இதில் சுமார் 300 என்ஜினீயரிங் கல்லூரிகளில் ஆசிரியர் பற்றாக்குறை, போதிய எந்திரங்கள் இல்லாதது உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது.

அதனை அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அறிக்கையாக குழு சமர்பித்தது.

இதைத் தொடர்ந்து அந்த 300 பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் உங்கள் கல்லூரியின் அங்கீகாரத்தை ஏன் ரத்து செய்யக்கூடாது என விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அண்ணா பல்கலைகழக துணைவேந்தர் காளிராஜ், "சில பொறியியல் கல்லூரிகளில் 90 மாணவர்களை சேர்ப்பதற்கு அனுமதி அளித்து இருந்த போதிலும், வெறும் 20 மாணவர்கள் மட்டுமே சேர்த்து இருந்ததால் கல்லூரி நிர்வாகம் அந்த 20 மாணவர்களுக்கு தேவையான ஆசிரியர்களை மட்டும் நியமித்து இருந்தது தெரிய வந்தது.

குறைவாக ஆசிரியர்களை நியமித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறோம். பதில் கிடைத்தவுடன் ஆட்சி மன்றத்தில் சமர்பித்து அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

சென்னை ஹைகோர்ட், தமிழகத்தில் உள்ள என்ஜினியரிங் கல்லூரிகள் தொடர்பாக காரசாரமான உத்தரவு பிறப்பித்த விபரத்தை, கீழேயுள்ள லிங்கில் பார்க்கவும்

Chennai high court: Engineers jobless; Why create more Engineering seats?

The Chennai high court has directed the Centre to answer as to why it should not appoint an expert body to analyse problems of engineering education, standards of teaching, unfilled seats in colleges, employment prosp­ects and to suggest remedial measures to improve the quality of education.

Justice N. Kirubakaran gave the directive while passing interim orders on a petition from C. Naresh Kumar, an engineering graduate, who along with 139 others was cheated by  S. Subramani of Infolink Private Limited on the promise of offering software training and subsequent placement of job by collecting Rs.45,000 from each candidate.

The judge also directed the Union and TN governments, AICTE and Anna University to answer 10 queries which included how many colleges had been in existence in India since 1980… To read more CLICK here

LATEST 10 UPDATES
தானே அடுக்குமாடி கட்டிட விபத்து: பலி எண்ணிக்கை 71 ஆக உயர்வு! Saturday 06 April 07:07 GMT
இலங்கை கடற்படை மீனவர்கள் 26 பேரை பிடித்து சென்றது! காரைக்காலில் பதட்டம்!! Saturday 06 April 06:38 GMT
"300 என்ஜினீயரிங் கல்லூரிகளின் அனுமதியை ஏன் ரத்து செய்ய கூடாது?" -அண்ணா நோட்டீஸ் Saturday 06 April 06:15 GMT
"புதுவையில் இருந்து மது பாட்டில் வருகிறது; அங்கே வெடிக்கும் போராட்டம்" -திருமா! Saturday 06 April 05:45 GMT

"மணிரத்னம் ஆச்சரியமாக தனது ஹீரோயினை விட்டு கொடுத்தார்" (மீட்டு கொடுத்தார் அல்ல) Saturday 06 April 05:26 GMT
பார்முலா ஒன் கார் ரேஸ் பஹ்ரெயினில் தொடங்கும் முன்னரே தொடங்கியது ஆர்ப்பாட்டம்! Saturday 06 April 04:20 GMT
சோனியாஜியின் மருமகன்ஜி ஊழழை அம்பலப்படுத்திய அதிகாரிக்கு 44-வது ட்ரான்ஸ்ஃபர்! Saturday 06 April 03:41 GMT
Ajith in Hyderabad:To kick starts next flick! 'Biriyani' team is there too!! Friday 05 April 16:38 GMT
பிரான்ஸ் – இந்தியா போர் விமான டீல் சறுக்குகிறது! பொறுப்பேற்க மறுக்கிறது பிரான்ஸ்!! Friday 05 April 14:53 GMT
பதட்டம்: சற்றுமுன் வட கொரியா இரு ஏவுகணைகளை கிழக்கு கரைக்கு நகர்த்தியது! Friday 05 April 14:12 GMT



Read more: http://viruvirupu.com/engineering-colleges-tamilnadu-approval-anna-university-question-51232/#ixzz2PfO7Szgr

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...